ஒரு கை துவரம் பருப்பை நான்கு கப் தண்ணீரில்
குழைய வேக வைத்து எடுத்துக்கொண்டு ஒரு
காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக வெட்டி,பெரிய
வெங்காயம் ஒன்று நீளவாக்கில் வெட்டி, பச்சை
மிளகாய் ஒன்று இரண்டாக வகுந்து குறுக்கே வெட்டி,
தக்காளி ஒன்று பொடியாக இப்படி எல்லாவற்றையும்
வெட்டி வைத்துக்கொண்டு..
சட்டியை அடுப்பில் ஏற்றி ஒரு கரண்டி நெய்விட்டு
அதில் ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம்,½ டீஸ்பூன்(கரு)மிளகு,1சிறிய லவங்க
இலை,1சிறிய துண்டு பட்டை,இவைகளை போட்டு
பொரிந்ததும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு,அத்துடன்
வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிண்டி
பச்சைமிளகாயையும் போட்டு ஒரு கிண்டு கிண்டி
தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிந்து வெந்ததும்
காலிஃப்ளவரை சேர்த்து, பருப்பு வேக வைத்த
தண்ணீரை அதில் ஊற்றி, பருப்பை நன்கு மசித்து
சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் கொதித்த பிறகு
தேவையான உப்பு சேர்த்து,காலிஃப்ளவர் வெந்தது
பிகு:மேலே குறிப்பிட்டிருக்கும் செய்முறை அளவு மூன்று
பேருக்கானது.
காலிஃபிளவர் அதிகம் வேகக்கூடாது.முக்கால் பதம்
வெந்தால் ருசி.
காரம் வேண்டாம் என நினைப்பவர்கள் பாதி அல்லது
கால் பச்சைமிளகாய் சேர்த்தால் போதுமானது.
சூப்பிற்கு பருப்பு வேகவைத்த தண்ணீர் மட்டும் போதும்.
பருப்பை சாம்பாரிலோ அல்லது பொரியலிலோ சேர்த்து
கொள்ளலாம். சூப் மட்டும்தான் சமைக்கப்போகிறோம்
என்றால் பருப்பை கொஞ்சமாக(ஒருகை)வேகவைத்து
சேர்க்கலாம்.