தக்காளி பெரிதாக ஒன்று,
ஒரு கப் தோலுரித்த சின்ன வெங்காயம்,
தோலுரித்த வெள்ளைப்பூண்டுபல் இரண்டு,
ஆறு காய்ந்த மிளகாய்,
நெல்லிக்காய் அளவு புளி,
உப்பு தேவைக்கேற்ப.
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக்
கொண்டு,தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து
மூன்று தேக்கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும்
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கடுகு அரைத்
தேக்கரண்டி போட்டுத்தாளித்து சிறிது கறிவேப்பிலை
சேர்த்து சூட்டுடன் துவையலில் ஊற்றி கலந்து
கொள்ளவேண்டும்.
பி கு: வெள்ளைப்பூண்டு பிடிக்காதவர்கள் அது
இல்லாமலும் துவையல் செய்யலாம்.
பத்து காய்ந்தமிளகாய் வரை சேர்க்கலாம்.காரமாக
இருந்தால் துவையலின் சுவை கூடும். அவரவர்
ருசிக்கேற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்ந்த மிளகாயை சிறிது நேரம் சுடு தண்ணீரில்
ஊறவைத்து அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.
காரம் இருக்காது.
இந்த துவையல் வெள்ளைப்பணியாரத்திற்கு
மட்டுமல்ல இட்லி,தோசைக்கும்கூட நன்றாக
இருக்கும்!
-மீனா
No comments:
Post a Comment