Friday, October 22, 2010

வெண்டைக்கா சாப்ஸ்

பிஞ்சு வெண்டைக்காய் பத்து, ஒரு இஞ்ச் நீளம் வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்

கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்,மிளகாய்த்தூள்
இரண்டு டீஸ்பூன், சோளமாவு ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சதூள் அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்,
உப்பு தேவைக்கேற்ப.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு
கரைத்து வைத்துக்கொண்டு அடுப்பில் நான்ஸ்டிக்பேன்
அல்லது சின்ன அளவிலான பாத்திரம் வைத்து தேவைக்
கேற்ற எண்ணை விட்டு சூடானதும் வெட்டிவைத்துள்ள வெண்டைக்காயை மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு பொன் நிறமாக எடுத்து சூடாக சாப்பிட்டால் மொறு மொறு வென்று ருசியாக இருக்கும்!


மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான ச்சாப்ஸ்!

மாலை ’டீ’க்கும் சில்லி சாஸ் தொட்டு சாப்பிட மிக பொருத்தம்!

பிகு: சோளமாவிற்கு பதில் கடையில் கெண்டக்கி மாவு
(Kentucky flour)  கிடைத்தால் அதை சேர்த்தும் செய்யலாம்.
ருசி கூடும்!.







2 comments:

  1. கடலை மாவு + அரிசி மாவு + மிளகாய்த் தூள் இவை கலந்து செய்த மாவில் வெண்டைக்காய் தோய்த்துப் பொரித்துச் செய்யும் முறை என் மாமியாரிடம் கற்றுக்கொண்டது. அதே போல் சேப்பங்கிழங்கும் செய்வோம். இரண்டுமே ரொம்பச் சுவை. ஆனால் கொஞ்சம் குறந்த அளவுதான் சாப்பிடணும்போல. எண்ணெய் இருப்பதால்.

    ReplyDelete
  2. இதே போல நிறைய காய்கறிகளில் செய்யலாம்.
    ஆனா நீங்க சொல்றாபோல எண்ணையில பொரிப்பதனால் அதிகமாவோ அடிக்கடியோ
    சாப்பிட முடியாது. ஆனா இதுலதான் ருசியே :)

    தங்கள் வருகை மகிழ்ச்சி நன்றி மிகவும்.

    ReplyDelete