Friday, April 2, 2010

பச்சை ஆப்பிள் வெல்லப்பச்சடி

பச்சை ஆப்பிள் நான்கை தோல்சீவிய பிறகு துண்டமாக
வெட்டி,பெரிய வெங்காயம் ஒன்று(சின்னவெங்காயம்
என்றால் ஐந்து)வெட்டிக்கொண்டு சிறிய ப்ரஷர்குக்கர்
அல்லது அது போன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து
எண்ணை ஒரு மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும்
கடுகு ஒரு தேக்கரண்டி,உளுத்தம் பருப்பு ஒரு
தேக்கரண்டி போட்டு அத்துடன் சிறிது பெருங்காயம்
காய்ந்த(வர)மிளகாய் இரண்டு,கறி வேப்பிலை சிறிது
கிள்ளிப்போட்டு,பிறகு வெட்டிவைத்துள்ள வெங்காயம்,
ஆப்பிள் இவைகளையும் அத்துடன் சேர்த்து சிறிது
நேரம் கிளறியபின் சிறிது மஞ்சள்தூள்,தனிமிளகாய்த்
தூள் இரண்டு தேக்கரண்டி, இஞ்சி விழுது ஒரு
தேக்கரண்டி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கப்
தண்ணீர் (ப்ரஷர் குக்கர் என்றால் அரை கப் தண்ணீர்)
விட்டு மூடிவைத்து(ஒரு சத்தம் போதுமானது)
ஆப்பிள் நன்கு வெந்ததும் அத்துடன் அரை கப்
(பொடித்த)வெல்லம் போட்டு சூட்டைக்குறைத்து
வைத்து வெல்லம் கரைந்து ஆப்பிளுடன் சேர்ந்து
தள தள வென்று வெந்து வந்ததும் இறக்கவேண்டும்.

பிகு:ஆப்பிளுடன் வெல்லம் சேர்ந்து வேகும்போது
எல்லா பக்கமும் சிதறும்.அதனால் அவசியம்
பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

தேவைக்கேற்ப உறைப்பு இனிப்பை கூட்டிகுறைத்துக்
கொள்ளலாம்

ஏந்தினார்ப்போன்ற(pan)பாத்திரம் சரியாக வராது.
ப்ரஷர்குக்கர் என்றால் மிக சுலபம்.

இந்த பச்சடியை(பிரியாணி, தக்காளி, நெய்)சாதம்
மட்டுமல்லாது பிரட்டிலும் தடவி சாப்பிடலாம்.
உப்பு உறைப்பு புளிப்பு இனிப்பு என்று மிகவும்
சுவையாக இருக்கும்.

-மீனா

2 comments:

  1. சமைக்கிறதை விடக் கஷ்டமாப் போச்சு கமெண்டறது எப்படினு! முதல்லே அதைக் கொஞ்சம் கவனிங்க மீனா! :))))))) மற்றபடி உங்க சமையல் குறிப்புகள் வழக்கம்போல் கலக்கல், இந்தப் பதிவிலே தான் கமெண்ட் பொட்டி திறந்துச்சு! :)))))))

    ReplyDelete
  2. ha ha ha.. :) நன்றி கீதா, அதெப்படி எனக்கு மட்டும் ரொம்ப சுலபமா வருது!

    ReplyDelete