Sunday, June 13, 2010

வெள்ளைப் பணியாரம்



பச்சரிசி இரண்டு கப் , உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
(நிறைய),பால் ஒரு டீஸ்பூன், சர்க்கரை அரை டீஸ்பூன்,
உப்பு கொஞ்சம்,தேவையான அளவு எண்ணெய்.

அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாகப்போட்டு ஒரு
மணி நேரம் ஊறியபின் உப்பு சேர்த்து (இட்லி மாவு
பக்குவத்தில்) நன்கு வெண்ணை போல் அரைத்து
எடுத்து, பிறகு உரலை(கிரைண்டரை) சிறிது தண்ணீர்
ஊற்றி கழுவி அந்த தண்ணீரை தனியாக எடுத்து
வைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவுடன் சர்க்கரை,
பால், கழுவிய தண்ணீர் சேர்த்து (இப்போது) தோசை
மாவு பதத்தில் நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

ஒரு ஏந்தலான (நான்ஸ்டிக்பேன்) சட்டியை அடுப்பில்
வைத்து பணியாரம் வேகவைப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து
எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை
எடுத்து எண்ணையில் ஊற்றிய பின்பு அரிகரண்டி
யினால் (வெந்து கொண்டிருக்கும் பணியாரத்தின்
மேல் கரண்டி பட்டுவிடாமல்) சுற்றிலும் உள்ள
எண்ணெயை பணியாரத்தின்மேல் எடுத்து உற்றவும்,
பணியாரம் உப்பி மேலெழும்பியதும் மறுபுறம்
திருப்பி விட்டு உடனே எடுத்து விட வேண்டும்.
(அதிகம் வெந்தால் கோல்டன் பணியாரமாக மாறி
விடும்)

இந்த வெள்ளைப் பணியாரத்துடன் தொட்டுக்கொள்ள
சீனி அல்லது மிளகாய்த்துவையல் சேர்த்து சாப்பிட்டால்
அதன் சுவையே அலாதிதான்!

-மீனா

1 comment: